December 21, 2017
தண்டோரா குழு
2 ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் ராசா,கனிமொழி உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள திராவிட முன்னேற்ற கழக உறுப்பி2னர்கள் வழக்கின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அணி சார்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.