May 16, 2018
தண்டோரா குழு
கோவையில் 95.48 சதவீதம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 10 வது இடத்தை பிடித்துள்ள நிலையில் இந்தாண்டு மாநில அளவில் இரண்டு இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.இதில் கோவை மாவட்டதில் 347 பள்ளிகளை சார்ந்த 36454 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.அதில் 34805 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் 1180க்கு மேல் 34 மாணவ மாணவிகள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 93.62 சதவீதமும்,மாணவிகள் 96.95 சதவீதம் என மொத்தம் 95.48 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு 95.83 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் 0.35 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.கடந்தாண்டு கோவை மாவட்டம் மாநில அளவில் 10 வது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்தாண்டு இரண்டு இடங்கள் முன்னேறி 8 வது இடத்தை பிடித்துள்ளது.