பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை(CISF) வீரர் தன் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியப்பிரகாஷ் வியாழக்கிழமை (ஜனவரி 12) கூறியதாவது:
நபிநகர் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (NPGCL) என்னும் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த போது நள்ளிரவு 12.3௦ மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட காவலர் பல்வீர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தை சேர்ந்தவர். இவர் இரண்டு மாதம் யோகா பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில்தான் பணிக்குத் திரும்பியுள்ளார்.
பணியில் இருந்தபோது விடுமுறை குறித்து எழும்பிய வாக்குவாதத்தில் பொறுமையிழந்த பல்வீர் தன்னுடைய துப்பாகியால் மற்றவர்களைச் சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்திற்குக் காரணமான பல்வீரைக் கைது செய்துள்ளோம். இச்சம்பவத்தை குறித்து அறிந்ததும் விசாரணை நடத்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்