November 29, 2017
தண்டோரா குழு
சீனாவின் மத்திய இராணுவ கமிஷனின் தலைவர் சாங் யாங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன மத்திய ராணுவத்தின் கமிஷன் தலைவர், சீன அதிபர் ஜின்பிங்.இவர் கடந்த (நவ 23)ம் தேதி,தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
சீனாவின் லஞ்சம் எதிர்ப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட கோ போசியோங் மற்றும்
சூ கைஹோ ஆகியோருடன் இவர் தொடர்பு வைத்திருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. அது குறித்து அதிகாரிகள் சாங் யாங்கை விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணைக்கு சீனாவின் மத்திய ராணுவ கமிஷன்(CMC) மற்றும் மத்திய கட்சி கமிட்டி அந்த விசாரணைக்கு ஒப்புதல் தந்தது.இந்த விசாரணையின் முடிவில், சட்ட விதிகளை மீறியிருப்பது, லஞ்ச ஊழல் சம்பத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அதிக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.அதன்
பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 19வது National Congress of the Chinese Communist Party யிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் திடீரென சாங் யாங் தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.