• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வறட்சியைப் போக்க சீனாவின் புது யுக்தி

May 31, 2016 தண்டோரா குழு.

வறட்சியைப் போக்கும் விதமாக மேக விதைப்பு நுட்பத்தைச் சீனா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

மழையைத் தூண்டும் ரசாயனப் பொருட்களை தீக்குண்டுகள் மூலமாகவோ அல்லது பீரங்கிகள் மூலமாகவோ மேகத்திற்குள் செலுத்துவது. அல்லது இந்த ரசாயனப் பொருட்களை விமானத்தின் மூலம் கீழே தெளிப்பது. இதுவே மேக விதைப்பு என அழைக்கப்படுகிறது.

இந்த முறை சீனாவிற்குக் கைவந்த கலை. 1958ம் ஆண்டு முதல் சீனா மேக விதைப்பு நுட்பத்தைத் தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கு மட்டுமல்லாது, மாசு பட்ட காற்றைச் சமன் செய்யவும் உபயோகிக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு பீஜிங்கில் ஒலிம்பிக் நடைபெற்ற போது கடுமையான பனிப் புகையை அகற்ற பயன்படுத்தப் பட்டது. அடுத்த ஒரு வாரமும் தெளிந்த வானத்துடன் காணப்பட உறுதி செய்யப்பட்டது.

கம்யூனிஸ்டு பார்ட்டி ஆப் சைனாவின் ஷாங்காய் செயலர் ஹான் ஷென்ங்ஸ் இந்த மாத ஆரம்பத்தில் இந்தியா வருகை தந்திருந்த போது இந்தத் திட்டத்தை இலவசமாகப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

இது குறித்து மஹாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிசிடம் பேசியபோது, வறட்சியைத் தணிப்பதற்கு சீனா உதவி செய்யும் என்று கூறியுள்ளார் இது வரையில் இந்தத் தொழில் நுட்பத்தைச் சீனா யாருடனும் பகிர்ந்து கொண்டதில்லை, ஆகையால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் பயனாக சீனாவின் பீஜிங்க், சாங்காய், அன்ஹூய் போன்ற இடங்களிலிருந்து விண்வெளி விஞ்ஞானிகள் மும்பையின் வறட்சிப் பிரதேசங்களைப் பார்வையிட வந்துள்ளனர். முதன் முதலாக முயற்சி செய்ய மும்பையைத் தேர்வு செய்த காரணத்தினால் மும்பையின் நிலத்தின் பாங்கையும் தன்மையையும் ஆராய முற்பட்டுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு பீஜிங்கில் தூவிய ரசாயனப் பொருட்கள் அதிகமாகிவிட்டபடியால் அசாதாரணமான பனிப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான குளிர் அலை வீசத்தொடங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ரசாயனப் பொருட்களின் உபயோகத்தால் காற்றும், நீரும் மாசு அடைவதைத் தடுக்க இயலாது என்று விஞ்ஞான வல்லுனர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவை நம் நாட்டிற்கு எவ்வகையில் உதவும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேக விதைப்பு கீழே விழும் முறை சீராக இருந்தால் நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க