• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் தியன்கோங்-2 ஆய்வுக் கூடம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

September 17, 2016 தண்டோரா குழு

சீனா கடந்த 2011 செப்டம்பரில் தியன்கோங்-1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை விண்ணில் செலுத்தியது.இந்த ஆய்வுக் கூடத்தில் சீனாவை சேர்ந்த விண்வெளி வீரார்கள், கடந்த 2012 ஜூனில் 8 நாட்கள் மற்றும் 2013ல் 12 நாட்களும் தங்கி இருந்து விட்டு பூமிக்கு திரும்பி உள்ளனர்.இதன் காலம் கடந்த மார்ச் மாதத்தோடு முடிவடைந்ததால் அடுத்த ஆண்டு பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சீனா தியன்கோங்-2 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.மேலும் இந்த ஆய்வுக் கூடத்துக்கு வரும் அக்டோபரில் 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தியான்கோங்-2 ஆய்வு கூடத்தில் 30 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப ஏதுவாக புதிய விண்கலத்தை அந்த நாடு ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது. ‘மார்ச் 7’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் கடந்த ஜூனில் ஆட்கள் இல்லாமல் விண்வெளி சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க