• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் ரூபாய் நோட்டை சாப்பிட கொடுத்தவரின் கைவிரலை கடித்து தின்ற புலி

November 25, 2017 தண்டோரா குழு

சீனாவில் ரூபாய் நோட்டுக்களை சாப்பிட கொடுத்தவரின் கைவிரலை புலி கடித்த சம்பவத்தின் காணொளி காட்சி இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

சீனாவில் ஹெனான் மாகாணம் ஜின்ஷியுவான் நகரில் சர்க்கஸ் நடை பெறுகிறது. அந்த கம்பெனிக்கு சொந்தமான விலங்குகளை கூண்டில் அடைத்துவிட்டு, அங்குள்ள பொது சதுக்கம் அருகே வைத்துவிட்டு, மாலை வேலையில் நடக்கவிருந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் தயாரிப்புகளில் அந்த சர்க்கஸ் நிறுவனம் மும்முரமாக செய்துக்கொண்டு வந்தது.

அப்போது, அந்த இடத்திற்கு 65 வயது மதிக்கத்தக்க பய் என்பவர் வந்து, அங்கு இருந்த விலங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது விளையாட்டாக அவர், கூண்டிலிருந்த புலிக்கு ரூபாய் நோட்டுகளை சாப்பிட தந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த புலி அவருடைய கையை கடித்து விட்டது.இதனால் அவர் வேதனை தாங்காமல் அலறி துடித்தார்.

உடனே அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, அந்த புலியை குச்சியால் குத்தினர். அந்த புலியும் அவருடைய கையை விடுவித்தது. பய் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடயை குடும்பத்தினர் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய உடல் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இருந்தும்
அவருடைய வலது கையின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலின் பாதியை புலி கடித்து தின்று விட்டது.

மேலும் படிக்க