• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்பச் சூழலுக்கு ஏங்கும் குழந்தைகள்!

August 11, 2018 பூங்கொடி

பெற்றோர் இன்றி தவிக்கும் பல குழந்தைகள் காப்பகங்கள் கருணை இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.பல்வேறு காரணங்களால் பெற்றோரை இழந்தும்,பெற்றோர் இல்லாமல் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டு அறிந்து அவர்களை பாதுகாக்க தமிழகத்தில் மாவட்டந்தோறும் காப்பகங்கள் உள்ளது.

அவர்களை தாங்கள் சொந்த குழந்தையாக நினைத்து வளர்க்க குழந்தையில்லாத பல தம்பதிகள் பலரும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.ஆனால் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை யாரும் முன் வந்து தத்தெடுப்பதில்லை.இந்நிலையில் ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது.

இதுகுறித்து கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள குழந்தைகள் சரணாலயத்தின் தலைமை இயக்குனர் வனிதா ரெங்கராஜன் கூறுகையில்,

“குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு தத்தெடுக்க விரும்புவோரின் குடும்பத்தின் பொருளாதாரம் உடல் ஆரோக்கியம் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பச்சிளம் குழந்தைகளைய தத்தெடுக்கவே விரும்புகின்றனர்.இதனால் ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளை யாரும் தத்தெடுக்க முன்வருவது இல்லை.இதனால் ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை காப்பகத்தில் அதிகரித்து கொண்டு போகிறது.மேலும்,பண்டிகை நாள் பிறந்தநாள் தீபாவளி எல்லாம் பார்க்கும் பொழுது இக்குழந்தைகள் அன்புக்காக ஏங்குகின்றனர். ஆனால் இவர்களை யாரும் முன்வந்து தத்தெடுப்பது இல்லை”.என்றார்.

இது குறித்து வழக்கறிஞர் திரு.நம்பி கூறுகையில்,

“குழந்தையை தத்தெடுப்பதற்கு பல சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அப்படி பல வழிமுறைகளை தாண்டி தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும்.ஒரு தாய் தத்து எடுப்பதும் ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு சமம் என்றே சொல்லாம்.அப்படி ஐந்து வயதுக்கு மேல் தத்தெடுக்கும் குழந்தைக்கு விவரம் இருக்க வாய்ப்பு அதிகம்.மேலும்,தான் தத்து பிள்ளை என்பது தெரிந்து விடும்.இது குழந்தைக்கு பெற்றோருக்கு இருவருக்கும் மனவேதனையளிக்கும். இக்காலக்கட்டத்தில் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சமூகம் சார்ந்த அடிப்படை அறிவு இருப்பதாலே யாரும் தத்து எடுக்க முன் வருவது இல்லை.மேலும்,வயது முதியவர்களும் கூட பச்சிளம் குழந்தைகளை தத்தெடுக்க முன் வருகின்றனர்.ஒரு குழந்தை இருந்து இன்னொரு குழந்தை தத்து எடுக்கும் பெற்றோருக்கு பிற்காலத்தில் சொத்து பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் வர வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது இதற்காகவே பச்சிளம் குழந்தையை தத்து எடுக்க விரும்புகின்றனர் பெற்றோர்கள்”. என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் பசீர் கூறுகையில்,

“இது போன்று குழந்தையை தத்தெடுக்க சட்டம் உள்ளது.குழந்தை இல்லாதவர்கள் குழந்தை இருந்தும் தத்து எடுக்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.அவர்களை தான் வாரிசாகவும் கருதி கொள்ளலாம்.ஆனால்,குழந்தையின் வயது கருத்தில் கொண்டு பெரும்பாலோனோர் தத்து எடுக்க முன் வருவது இல்லை.இதனால் காப்பகத்தில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது.இந்த தற்காலிக தத்து திட்டத்தின் கீழ் கடந்த வருடம் வரை மூன்று குழந்தையை மட்டுமே தத்தெடுத்து சென்று உள்ளனர்.இந்த திட்டத்தின்படி குழந்தையை தத்து எடுக்க விரும்புவோருக்கு கவுன்சிலிங் வழங்கி இரு தரப்பின் சம்மதத்துடன் குழந்தை தத்து எடுப்பு மேற்க்கொள்ளப்படுகிறது. ஆனாலும் கூட குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர் சற்று வளர்ந்த குழந்தைகளை தத்து எடுக்க மறுக்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும் அனைத்து குழந்தைக்கும் ஒரு குடும்பம் வேண்டும்”.என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோவிந்த் கூறுகையில்,

“சிறு வயது குழந்தைகளைய அதிகம் தத்து எடுக்க விரும்பும் பெற்றோருக்கு மனதளவில் மாற்றம் வேண்டும்.கோவையில் உள்ள காப்பகங்களில் ஐந்து வயதுக்கு உட்டபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது.வருடத்துக்கு இரண்டு ஐந்து வயது குழந்தைகள் தான் தத்தெடுத்துக்கப்படுது ஐந்து வயதுக்கு மேற்ப்பட்ட பல குழந்தைகள் அன்புக்காக ஏங்கி ஆசிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.தத்தெடுக்கும் பெற்றோர்கள் மனது வைத்து இது போன்று குடும்ப சூழலுக்கு எங்கும் குழந்தைகளை தத்தெடுத்தால் இவர்களுக்கும் ஒரு குடும்பம் கிடைக்கும் என்பதே என் கருத்து”.என்றார்.

இந்த நிலை மாற அனைத்து ஆதரவற்ற குழந்தைகளையும் எந்த வித வயது பகுபாடுயின்றி தத்தெடுக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.குழந்தைகளை தத்து எடுப்போருக்கு மனதளவில் மற்றம் வர வேண்டும்.அப்போது தான் ஐந்து வயதுக்கு மேற்பட்ட பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு குடும்பச் சூழலில் வாழ வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க