• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண் !

October 7, 2016 தண்டோரா குழு

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூரை நோக்கி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது செங்கல் பட்டு ரயில் நிலையத்தின் அருகே ரயில் சென்ற போது அதில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அருகில் இருந்த மற்ற பயணிகள் ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் புடவைகளை பயன்படுத்தி, அப்பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றனர். ரயில் செங்கல்பட்டு ரயில்நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தகவல் கிடைத்து அங்கு வந்த ரயில்வே மருத்துவர் புண்ணிய கோடி அப்பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில், அந்தப் பெண் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் ராஜேந்தர் மனைவி ரூபா (25) என்பதும் தெரியவந்தது. மேலும், திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் ரயில் செங்கல்பட்டில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக செல்ல நேர்ந்தது.

மேலும் படிக்க