May 10, 2018
தண்டோரா குழு
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மீறுபவர்கள் மின்னணு முறையில் அபராதம் செலுத்தும் புதிய வசதியை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதன் மூலம்,சாலை விதிகளை மீறுபவர்கள் தங்கள் டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அபராதத்தை செலுத்தலாம்.அபராதத்தை வசூலிக்கும் வகையில்,போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளன.அபராதம் செலுத்துவோருக்கு அதற்கான மின்னணு ரசிதும் வழங்கப்படும்.
மேலும்,அபராதம் செலுத்த முடியாதவர்கள் தபால் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சென்று பணமாக அபராதத்தை செலுத்த வேண்டும்.இந்த புதிய திட்டமானது,இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.