• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை

December 13, 2017

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவ.16-ம் தேதி கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேல்தளத்தை வாடகைக்கு எடுத்து, துளையிட்டு 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களின் உறவினர்கள் 4 பேர் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னையிலிருந்து, ராஜஸ்தான் விரைந்தனர். சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையிலான தனிப்படையினர் நேற்றிரவு கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, கொள்ளையர்களால் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் கொளத்தூர் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழக போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சென்று உயிரிழந்த சம்பவத்தை கேள்விபட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறினார்.

மேலும் படிக்க