November 17, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது.அப்போது தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி டிசம்பர் 22க்குள் அறிக்கை தர தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.