• Download mobile app
25 Jan 2026, SundayEdition - 3637
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தக பளுவால் கூனிய முதுகை நிமிர்த்த செய்தியாளர்களைக் கூட்டிய சந்திராபூர் மாணவர்கள்

August 26, 2016 தண்டோரா குழு

சந்திராபூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா நிகெடன் பள்ளி மாணவர்கள் இருவர் நாக்பூர் பத்திரிக்கையாளர்களை அழைத்து தங்கள் புத்தகச் சுமையைப் பற்றி புகார் கூறியுள்ளனர்.

தினமும் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகங்களைச் சுமந்து இரண்டு அல்லது மூன்று மாடிகளைக் கடக்கவேண்டி உள்ளது என்று வித்யா நிகெடன் பள்ளியில் படிக்கும் 12 வயது கொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு தினத்தில் 8 பாடங்களை நடத்த நேரம் ஒதுக்குவது வழக்கம். ஆகையால் 8 புத்தகங்களும், அதற்குத் தேவையான 8 நோட்டுப் புத்தங்களும் சேர்ந்து 16 புத்தகங்கள் ஆகிவிடுகின்றன. சில நாட்களில் வேறு சில பாடங்கள் நடத்த வேண்டி வந்தால் அப்போது இன்னும் அதிக புத்தகங்கள் தேவைப்படும் சூழ்நிலை உருவாகிறது.

ஆக சராசரியாக 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகங்களைச் சுமந்து பள்ளி செல்வதற்குள்
சோர்வடைவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டு.

இதைப்பற்றி பலமுறை தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் எந்தப் பலனுமில்லை என்றும் கூறியுள்ளனர். பலமுறை பெற்றோர்கள் புத்தகங்கள் சுமக்க உதவிக்கு வருவதுண்டு என்றும் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் மும்பை உயர்நீதிமன்றம் புத்தகச் சுமையை குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி விரிவான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதைக் கடைப்பிடிக்கத் தவறும் தலைமையாசிரியர்கள், மற்றும் நிர்வாகத்தினர் தண்டனைக்கு
உள்ளாவார்கள் என்றும் அறிக்கை தெளிவாக்கியுள்ளது. 1.06 லட்சம் பள்ளிகள் இக்கட்டளைக்குக் கீழ் படியவேண்டும் என்றும் கூறியுள்ளது.

மாணவர்களின் ஒரு சில புத்தகங்களைப் பள்ளியிலேயே வைக்க ஆவன செய்யுமாறு நிர்வாகத்தை வலியுறுத்துவதின் மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குப் பள்ளி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், தங்கள் மீது பள்ளி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புவதாகவும் அம்மாணவர்கள் கூறினர்.

மேலும் படிக்க