• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CCTNS மாநாட்டில் விருது பெற்ற பெண் காவலருக்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பாராட்டு

December 3, 2018 தண்டோரா குழு

CCTNS மாநாட்டில் சான்றிதழ்களும் கேடயமும் பெற்ற கோவையை சேர்ந்த பெண் காவலருக்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பாராட்டி
பரிசு வழங்கினார்.

கோவை மாவட்டம் மாகலிங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கேபாலாமணி. இவர் மாநில குற்றப் பதிவேடுகள் கூடம் சென்னையின் மேற்கு மண்டல காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த நபர்கள் ஒப்பீடு செய்யும் இணைப்பு பணியில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். பாலாமணி மாநில குற்றப் பதிவேடுகள் கூடம் பரிந்துரையின் பேரில் சுமார் 51 காணமல் போனவர்களை, அடையாளம் தெரியாமல் இறந்த நபர்களுடன் CCTNS CITIZEN PORTAL ல் ஒப்பீடு செய்து ஒப்பீட்டு விவரங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டியதன் மூலம் நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரவும் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்கள் உறவினர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கடகைமகளை செய்ய ஏதுவாக பணி புரிந்தமைக்கும் காணாமல் போய் உயிருடன் இருந்த 8 நபர்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மனநல மருத்துவமனை, கடலூரில் செயப்படும் கிளன்னி காப்பகத்திலும் பொள்ளாச்சியில் செயப்படும் அன்பு இல்லத்திலும் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றும் ஆதரவுற்று இருக்கும் நபர்களுடன் ஒப்பீடு செய்து அவர்களது உறவினர்களுடன் ஒப்படைத்து சிறப்புற பணியாற்றியமைக்காகவும் கடந்த கடந்த 29.102018 மற்றும் 30.10.2018ம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற CCTNS மாநாட்டில் மேற்படி பெண் தலைமை காவலருக்கு அவரது பணியை சிறப்பித்து சான்றிதழ்களும் கேடயமும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

இதையடுத்து, டெல்லியில் இருந்து திருப்பிய அவரை கெளரவிக்கும் வகையில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பாலாமணியை பாராட்டி பரிசு வழங்கினார்.

மேலும் படிக்க