• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பியதால் தமிழச்சி மீது வழக்கு பதிவு

September 30, 2016 தண்டோரா குழு

முதலமைச்சர் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட தமிழச்சி என்ற பெண் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து அவரை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்த பெண்ணான தமிழச்சி பிரான்ஸில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இவர் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதாக முகநூலில் தனது கருத்தை பதிவிட்டார். இதற்கு முன்னர் சுவாதி கொலை வழக்கில் முகநூலில் கூறிய கருத்துக்கள் மூலம் இவர் பிரபலமானதால் இவரது இந்த கருத்து முகநூலில் தீயாய் பரவியது.

இதையடுத்து, முதல்வர் குறித்து தவறாக அவதூறு பரப்பியதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யும் படி புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவுபோலீசார் பிரிவு எண் 153, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, 505(1)(BC)பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவது, 505 Clash Act ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், புதிதாக யாரும் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க