• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வழக்குகளை கண்டு அஞ்சபோவதில்லை – ராகுல் காந்தி

September 29, 2016 தண்டோரா குழு

ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றுவதை தடுக்கவே தம் மீது வழக்குகள் போடப்படுவதாகவும், வழக்குகளை கண்டு தான் அஞ்ச போவதில்லை எனவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

2015ல் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக அசாம் வந்த போது அங்குள்ள வைஷ்ணவா கோயிலுக்குள் நுழைய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தடையாக இருந்தனர் என கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் இதில் எந்த ஆதாரமும் கிடையாது எனவும், ராகுல்காந்தியின் பேச்சு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளது என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கவுகாத்தி நீதிமன்றத்திற்கு வந்தார். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ராகுல்காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

இது குறித்து ராகுல்காந்தி கூறுகையில்.

விவசாயிகள் உரிமைக்காகவும், ஏழை மக்கள் வாழ்வு முன்னேறவும் ,வேலையில்லா இளைஞர்கள் நலனுக்காகவும் நான் உழைப்பதால் என் மீது பல்வேறு வழக்குகள் போடப்படுகின்றன. எத்தனை வழக்குகள் போட்டாலும் எனது பயணத்தை நிறுத்த மாட்டேன். வழக்குகள் கண்டு நான் அஞ்ச மாட்டேன். எனது இலட்சியத்தை தடுக்க ஆர்.எஸ்.எஸ்.முற்படுகிறது. நாட்டை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கு நான் எதிரானவன் என கூறினார்.

மேலும் படிக்க