• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை தீவிரவாத தாக்குதலில் பல உயிர்களை காப்பாற்றிய மோப்ப நாய் சீசர் மரணம்

October 14, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பலரது உயிரை காப்பாற்றிய சீசர் நாய் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

மோப்ப நாய் சீசர், மும்பை போலீசின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நீக்கல் பிரிவில், கடந்த 2005 முதல் 2013 வரை பணியாற்றியது. இந்த சமயத்தில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தாக்குதல் நடத்தினர். இத்தீவிரவாத தாக்குதலில் 164 பேர் கொல்லபட்டனர். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இத்தாக்குதலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவதன்று மும்பை சிஎஸ்டி ரயில்நிலையத்தில் இரண்டு கையெறி குண்டுகளை கண்டுபிடித்து பலரது உயிரை காப்பாற்றியது சீசர் நாய். மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நரிமன் ஹவுசில் மூன்று நாட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இது மட்டுமின்றி மும்பையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2001 ஜூலையில் நிகழ்ந்த தொடர்
குண்டுவெடிப்பு ஆகிவற்றின் போது சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டையும் பெற்றது சீசர்.
பதினொரு வயதான சீசர் தன்னுடன் பணியாற்றிய டைகர், சுல்தான் மற்றும் மேக்ஸ் ஆகியவை உடல்நல குறைவால் இறந்து போனதும் மன அழுத்ததுடனே இருந்துள்ளது.

இதனால் கடந்த ஜூன் மாதம் பரேல் விலங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர், மும்பையின் புறநகர் பகுதியான விராரில் வசிக்கும் விலங்கு ஆர்வலர் இஸ்ஸா ஷாவின் பண்ணையில் தனது ஓய்வு வாழ்க்கையை செலவிட அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சீசர் உயிரிழந்தது என்றும் தைரியம், எச்சரிக்கை மற்றும் திறமையான அதன் சேவைகளை நாங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்வோம் என்று மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீசர் நாட்டிற்கு செய்த சிறந்த பணியால் அதனுடைய இறந்த உடலில் இந்திய மூவண்ண கொடியை போர்த்தி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க