January 24, 2018
தண்டோரா குழு
அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில்
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் அரசின் பேருந்து கட்டண உயர்வு முடிவில் தலையிட முடியாது என்றும்,பல பொருட்களின் விலை உயர்கிறது ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும்,அனைத்து பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.