• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய தி.மு.க. பிரமுகர் தற்காலிக நீக்கம்

August 1, 2018 தண்டோரா குழு

பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய திமுகவின் யுவராஜ் உள்ளிட்ட 2 பேர் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில்திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், திவாகர் ஆகியோர் கடந்த 28-ஆம் தேதி இலவசமாக பிரியாணி கேட்டு அக்கடையின் பணியாளர்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், யுவராஜ், திவாகர் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க