• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் சுரங்கப் பாதை.. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டியது கண்டுபிடிப்பு

August 18, 2016 தண்டோரா குழு

வட மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குக் கீழ் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சுமார் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது 1885ம் ஆண்டு கட்டப்பட்டு இவ்வளவு நாள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்த சுரங்கப்பாதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையின் கீழ் உள்ள இந்த சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் சுமார் 20 அடி உயர இரும்பு கதவு உள்ளது.அதனைத் தாண்டி உள்ளே சென்றால் சுமார் 13 அறைகளும், ஆயுதங்கள் சேமிக்கும் கிடங்கும் உள்ளன.

மேலும், இந்த சுரங்கப்பாதையை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நேற்று பார்வையிட்டனர்.வரலாற்றுச் சின்னமான இந்த சுரங்கப்பாதையை, அதன் பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்குமாறு, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், சுரங்கப்பாதையில் காற்று வசதி, வெளிச்சத்திற்கான வசதி, கழிவு நீர் செல்லும் பாதை என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதை பார்வையிட்ட ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க