December 30, 2025
தண்டோரா குழு
தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிக்கும் BNI ரிதம் சேப்டர் தனது 5ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்பிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குழு பணியால் சிறப்பான வணிக வளர்ச்சியை இந்த சேப்டர் பதிவு செய்துள்ளது.
50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ள ரிதம் சேப்டர், இதுவரை 12,000க்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. சமீபத்திய கூட்டங்களில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றது, சேப்டரின் வலுவான தாக்கத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மூலம் 6,582 உறுதிப்படுத்தப்பட்ட வணிக பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக ₹7,52,64,647 (₹7 கோடி 52 லட்சம் 64 ஆயிரம் 647) மதிப்புள்ள வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ₹2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.எதிர்கால நோக்கமாக ரிதம் சேப்டர் ₹150 கோடிக்கும் மேற்பட்ட வணிக மதிப்பை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.இது தொழில் முனைவோர்களுக்கு நீடித்த வளர்ச்சி மற்றும் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
நிர்வாக குழு BNI ரிதம் சேப்டரின் வெற்றிக்கு காரணமாக உள்ள நிர்வாக குழு:
தலைவர் (President):பிரவீன் குமார்
நிர்வாக இயக்குநர் (Executive Director): சந்தோஷ் ராதாகிருஷ்ணன் துணை தலைவர் (Vice President):ஏ.கே. சாமி
செயலாளர் & பொருளாளர் (Secretary & Treasurer):செல்வி விஜய்
மேலும், சேப்டரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த கோர் கமிட்டி மற்றும் தொடக்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருவதாக நிர்வாக குழு தெரிவித்தது.
விழாவில் பேசிய நிர்வாகிகள், நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை மற்றும் நீண்டகால வணிக உறவுகள் ஆகியவை ரிதம் சேப்டரின் வெற்றியின் அடிப்படை எனக் குறிப்பிட்டனர்.