October 2, 2018
தண்டோரா குழு
இரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக இரத்த தானம் செய்பவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
இரத்த தானத்தை ஊக்குவிக்கும் முயற்சியில்,இரத்த தானம் செய்பவர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று நூதன முறையில் விளம்பரம் வெளியிட்டு அசத்தியுள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.இந்த விடுமுறையை அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுப்பு விடுமுறையில் இணைத்து கொள்ளலாம் என்றும்,அவர்கள் விருப்பம் போல இவ்விடுமுறையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டு தோறும் 3,50,000 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது.ஆனால் கடந்தாண்டு வெறும் 1,90,000 யூனிட் இரத்தம் மட்டும் கிடைத்துள்ளது.இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது இரத்தம் கிடைக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது.இதன் காரணமாகவும்,இரத்ததானத்தை அதிகரிக்கும் பொருட்டும் இந்த நூதன முயற்சியை அம்மாநில சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.