• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கறுப்புப் பணத்தை ஒரு மாதம் முன்பே டெபாசிட் செய்துவிட்டனர் – அரவிந்த் கேஜ்ரிவால்

November 12, 2016 தண்டோரா குழு

ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிப்பதற்கு ஒரு மாதம் முன்பே கறுப்புப் பணம் வைத்திருப்போர் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டனர் என்று தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புகார் கூறினார்.

ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்போர் வரும் டிசம்பர் இறுதிக்குள் அவற்றை வங்கி, அஞ்சலகங்களில் மாற்றி புதிய நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.

இதற்கு வரவேற்பும் விமர்சனமும் வந்துள்ளன. இந்நிலையில், இது குறித்து தில்லியில் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியதாவது:

பழைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்களைத் தடை செய்வதால் பயன் ஏற்படாது. பா.ஜ.க, வினர் மற்றும் பதுக்கல்காரர்களிடம் முன்பே தெரிவித்து விட்டுத்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

கறுப்புப் பணம் வைத்திருப்போர் ஒரு மாதத்திற்கு முன்பே தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டனர். வரி ஏய்ப்பு செய்வோர் தங்கம் மற்றும் டாலர்களில் முதலீடு செய்து விட்டனர். கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு முன் கூட்டியே அவகாசம் கொடுத்துவிட்டுத்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு, நாட்டில் தற்போது மிகப் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் நோக்கத்தைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்ப பெற வேண்டும். கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர்களை அரசு வெளியிடுமா? மோடியின் இந்த அறிவிப்பால் அதிக பயன் அடைந்தவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்போர் மற்றும் வரி ஏய்ப்பு செய்தோர்தான்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

மேலும் படிக்க