August 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் தவறாக பதிவிட்ட திரிபுரா ஆளுநர், சற்று நேரத்தில் அப்பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலகுறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.அதைப்போல் இன்று காலை அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில்,வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த திரிபுரா ஆளுநர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பின்னர்,சற்று நேரத்தில் அப் பதிவை நீக்கிய திரிபுரா ஆளுநர்,ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளை நம்பி இரங்கல் செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்து
உள்ளார்.திரிபுரா ஆளுநரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.