October 11, 2018
தண்டோரா குழு
பாடகி சின்மயிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.திரையுலகமே கவியரசு வைரமுத்து மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் புகார் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.சின்மயி தொடர்ந்து,தனக்கு பெண்கள் அனுப்பும் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
இதனைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிரடி கருத்தை பதிவிட்டிருந்தார்.எனினும் வைரமுத்து டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பாடகி சின்மயி வைரமுத்துவின் டுவீட்டை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு பொய்யர் என டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில்,பாடகி சின்மயிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாக டுவிட் செய்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என பதிவிட்டுள்ளார்.