• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ‘இந்தியஅரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருது

October 27, 2018 தண்டோரா குழு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பாஜக கட்சியில் தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் பொறுப்பேற்றார்.மருத்துவத் துறையைச் சார்ந்த இவர்,தமிழகப் பாஜகவின் முதல் பெண் தலைவராவார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகளான இவர்,பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர்,துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.தமிழக பாஜகவின் முக்கிய முகமாக அவர் தற்போது இருந்து வருகிறார்.

இந்நிலையில்,அரசியல்,மருத்துவ,சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண்தலைவர் என்று சிக்காகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க