• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள் – தமிழிசை சௌந்தர்ராஜன்

October 22, 2018 தண்டோரா குழு

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும்,மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தோல்வியடைந்து வரும் நிலையில்,ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் தோல்வியடைவது உறுதி என தெரிவித்தார்.மோடியுடன் ஒப்பீடும் போது ராகுல்காந்திக்கு மக்கள் செல்வாக்கு குறைவு எனவும்,ராகுல்காந்தியை கூட்டணி கட்சிகளோ,மக்களோ,காங்கிரஸ் கட்சி கூட பிரதமர் வேட்பாளராக ஏற்கமாட்டார்கள் என கூறிய அவர்,பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும்,மக்கள் ஏற்கும் தலைவராக ராகுல்காந்தி இல்லை எனவும் தெரிவித்தார்.

பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது,அதிகாரபூர்வமாக யாருடனும் பாஜக கூட்டணி குறித்து பேசவில்லை.கூட்டணி குறித்து பேசுவதற்கு காலநிர்ணயம் வைத்துள்ளோம்.மேலும்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும்,பாஜக சாதாரண கட்சி அல்ல எனவும், 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பலம் பொருந்திய கட்சி எனவும் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக மோடி இருக்க வேண்டுமென அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களும்,இந்தியர்களும் விரும்புகின்றனர்.நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வியூகம் வெற்றி பெறும்.அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லியுள்ளார்.ஆனால் ஊழல்வாதிகளுடனும் 20 ரூபாய் டோக்கன்காரர்களுடன் பாஜக கூட்டணி வைக்காது எனவும்,நான்கரை ஆண்டு பாஜக ஆட்சியில் மதம் சார்ந்த பிரச்சணை இல்லை. மனம் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கிறோம் எனக் கூறினார்.

வடக்கே ராமர்,தெற்கே ஐயப்பன் அரசியல் செய்கிறதா என்ற கேள்விக்கு,அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்.சபரிமலையில் பின்பற்றப்படும் ஐதீகத்தை கடைபிடிக்க வேண்டும் இதை தான் பாஜக வலியுறுத்துகிறது என அவர் பதிலளித்தார்.

மேலும்,18 எம்.எல்.ஏ வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தாலோ,அசாதராண சூழல் வந்தாலோ தான் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது என கூறிய அவர்,MeToo விவகாரத்தில் பெண்களை போல,ஆண்கள் சொல்வது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து குறித்த கேள்விக்கு,அது அவரது தனிப்பட்ட கருத்து எனவும், அது கட்சியின் கருத்து அல்ல என தெரிவித்தார்”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க