• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு நாட்டின் அழிவுக்கு வழி வகுத்தது – ஸ்டாலின்

November 8, 2018 தண்டோரா குழு

ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு நாட்டின் அழிவுக்கு வழி வகுத்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர்.ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர்.சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,

“பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்,ஒருவர் இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த பணத்தை சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்ததுடன் அவர்கள் தெருவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.மேலும்,வங்கிகளுக்கு முன் முடிவில்லா வரிசையில் மக்கள் நின்றதாகவும்,அவர்களில் பலர் உயிரிழந்ததாகவும் புகார் கூறியுள்ள அவர்,இந்த நடவடிக்கையால் சிறு ஆலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோனதாகவும் விமர்சித்துள்ளார்”.

மேலும் படிக்க