• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

December 23, 2017 தண்டோரா குழு

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான கால்நடைதீவன ஊழல் வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

பீகாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில் இருந்து 84.5 கோடி ரூபாய் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் இன்று தீர்ப்பு அளிக்கிறார்.இந்த வழக்கில் லாலு பிரசாத் உள்பட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட, ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி இறுதி வாதமானது முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க