January 26, 2018
தண்டோரா குழு
பிரபல வங்கள திரைப்பட நடிகை சுப்ரியா தேவி இன்று(ஜன 26) காலமானார்.
வங்கள திரைப்பட நடிகை சுப்ரியா தேவி(83) மாரடைப்பால் காலமானார்.பத்மஸ்ரீ விருது பெற்ற சுப்ரியா தேவி நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
நடிகை சுப்ரியா தேவி தனது இளம் வயதிலேயே நடன திறன் மிக்கவராய் இருந்தார். அவருடைய 7 வயதில், அவருடைய நடன திறனை கண்ட, பர்மாவின் அப்போதைய பிரதமர் அவருக்கு விருது வழங்கினார். அவரது தந்தை கோபால் சந்திரா பானர்ஜி இயக்கிய இரண்டு நாடகங்களில் நடித்து அவர் அறிமுகமானார்.
கடந்த 1952ம் ஆண்டு,முன்னாள் நடிகர் உத்தம் குமார் நடித்த ‘பாசு பரிபார்’ என்ற திரைப்படம் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.இதுவரை 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு கடந்த 2011ம் ஆண்டு, மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த ‘பங்கா விபுஷு’ விருதும், கடந்த 2014ம் ஆண்டு,இந்திய நாட்டின் நான்காவது மிக உயர்ந்த பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.