• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிசிசிஐயின் புதிய செயலாளர் மற்றும் தேர்வுகுழு தலைவர் அறிவிப்பு

September 21, 2016 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த பொதுகுழுக் கூட்டத்தில் இடைக்காலமாக நியமனம் செய்யப்பட்ட செயலாளர் அஜய்ஷிர்கே, இந்த கூட்டத்தின்போது மீண்டும் முறைப்படி செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் இந்திய வீரர் எம்.எஸ்.கே பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இன்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இவர்,முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரான சந்தீப் பாட்டீலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐந்து பேர் கொண்ட மூத்த தேர்வுக்குழுவில் இவர் தெற்கு மண்டலத்தின் பிரதிநிதியாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க