August 31, 2018
தண்டோரா குழு
செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவி வருவது முற்றிலும் வதந்தி என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் காரணமாக,அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்ற தகவல் பரவியது.செப்டம்பர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை,3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி,4 மற்றும் 5ம் தேதிகளில்,ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என,தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்கள் பரவியது.இது முற்றிலும் வதந்தி என,நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்,ஒரு சில மாநிலங்களில் மட்டுமே திங்கட்கிழமையன்று ஜன்மாஷ்டமி பண்டிகைக்கான விடுமுறை எனவும்,செப்டம்பர் 4-5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து,ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதன் காரணமாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.