• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

August 18, 2016 தண்டோரா குழு

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை நோக்கிக் கடந்த 14ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது.அப்போது விமானம் இந்திய வான் பகுதியை நெருங்கிய நேரத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணியும் நிறைமாத கர்ப்பிணியுமான டியான்னே(32) என்பவருக்குப் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் மருத்துவ உதவித் தேவைப்படுகிறது என்னும் செய்தியை அறிந்த சுமவான் மற்றும் ஜென்னிபர் என்னும் இரண்டு செவிலியர் உடனே உதவிக்கு வந்துள்ளனர்.அவர்களுடைய உதவியால் டியான்னேவிற்கு விமானத்திலேயே ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்து உள்ளனர்.

விமானத்தின் ஓட்டுனர், கேப்டன் ப்ராடோ விமானத்தை பாங்காக் நகரில் விமானத்தை தரையிறக்க நினைத்தாகவும் ஆனால் அங்குச் செல்ல சுமார் 2 மணிநேரம் என்பதால் சுமார் 45 நிமிடத்தில் ஹைதராபாத் நகரம் இருப்பதால் அங்குச் செல்வது தான் சரியானது என்று அங்கே விமானத்தை தரையிறக்கம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் பிறக்க இருந்த குழந்தை அதன் முன்பே பிறந்துவிட்டது.தாயையும் குழந்தையையும் உடன் இருந்த பயணிகள் நான்கு கவனித்து கொண்டனர்.குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தை என்பதால் தாயையும் குழந்தையையும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

செபு பாக் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் ஆயுசு முழுவதும் அதில் இலவச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பு சலுகை அந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க