• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஏடிஎம் மையங்களில் விரைவில் ரூ. 20, ரூ.50 நோட்டுகள் கிடைக்கும்

November 15, 2016 தண்டோரா குழு

சில்லறைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளை விநியோகிப்பது விரைவில் தொடங்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பழைய ரூ 500, ரூ 1000 செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பெரிதும் சிரமப்பட்டனர். குறிப்பாக சிறு, குறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளிகள் ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை மாற்ற சில்லறை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வங்கிகளில் பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகளை மாற்றினாலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 2௦௦௦ தான் அதிக அளவு வழங்கப்படுகிறது.

ஏ.டி.எம். மையங்களில் ரூ 100 மட்டும்தான் வருகிறது. இந்த பிரச்சினையைப் போக்க ஏ.டி.எம் களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் விநியோகம் விரைவில் தொடங்கும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

தென் மாநிலங்களில் வங்கிகளின் வேலைப்பளு 50 சதவீதம் குறைந்துவிட்டது. இதன் மூலம் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர்.

ரூ.100 நோட்டுகளுக்கான எண்ணிக்கை கட்டுப்பாடு மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களின் வடிவம் காரணமாகவே ஏடிஎம் இயந்திரங்களில் விரைவில் ரூபாய் நோட்டுகள் தீர்ந்து விடுகின்றன.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.

மேலும் படிக்க