August 27, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.9 வது நாளன இன்று,400 மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 48.6 நொடிகளில் இரண்டாவதாக இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம்,13 வெள்ளி,20 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில்,வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.