August 27, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு அரசு சாா்பில் தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.இதில் ஸ்குவாஷ் விளையாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த ஜோஸ்ன சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷலுக்கு ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம்,10 வெள்ளி,20 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசை ஒடிசா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.