• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

October 27, 2018 தண்டோரா குழு

செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன் என போக்குவரத்து துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.கரூர் பரமத்தியில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“அ.தி.மு.க.ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சி.இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது.32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த இயக்கம் அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான நீதிமன்ற தீர்ப்பு ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது.அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்?மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?.கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க