• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரொக்கப் பணப் புழக்கம் அதிக அளவில் இருக்காது – அருண் ஜேட்லி

December 2, 2016 தண்டோரா குழு

வரும்காலங்களில் நாட்டில் ரொக்கப் பணப் புழக்கம் அதிக அளவில் இருக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பினர்.

ரொக்கமாகப் பணத்தைச் செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறிவரும் இந்நிலையில், கறுப்புப் பண ஒழிப்பைத் தாண்டி ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி முன்னேறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது நடவடிக்கையால், அந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரொக்கப் பணப் புழக்கம் இனி நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு இருந்ததுபோல் வரும் காலங்களில் இருக்காது. அதே வேளையில் வர்த்தகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. மத்திய அரசின் நடவடிக்கையால் வர்த்தகம் வளரும். ரொக்கப் பணப் புழக்கம் குறையும். தற்போது நிலவிவரும் பணத் தட்டுப்பாடு வரும் 31-ம் தேதிக்குள் சீராகிவிடும் என்றார் அருண் ஜேட்லி.

மேலும் படிக்க