• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் – ராமதாஸ்.

October 15, 2016 தண்டோரா குழு

தமிழகமுதலமைச்சரின் உடல்நிலை குறித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காகக்கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து இந்த விவகாரம்தொடர்பாகஇதுவரைஆறுபேர்கைது செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில் இத்தகைய கைதுநடவடிக்கைகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற சந்தேகம்எழுகிறது.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்றுடன் 24 நாட்கள் ஆகின்றன. மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட நாளிலிருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது.

கட்சி எல்லைகளைக் கடந்து முதல்வர்நலம் பெற அனைவருமேவேண்டுகின்றனர். இவற்றைத் தாண்டி முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருகட்டத்தில் பரவின. எனினும், கடந்த 6-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்ட பிறகு வதந்திகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.

ஆனாலும், முதல்வரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் உரையாடுவது தொடர்கிறது. இது இயல்பான ஒன்றுதான். இதற்காக வழக்குப் பதிவு செய்து மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

தமிழக மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தான் தமிழகத்தின் பேசப்படும்பொருளாக மாறியிருக்கிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளையும், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இயற்கையான ஒன்றுதான்.

முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலேயே அவரது உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதலமைச்சரின் உடல்நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம் பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.

ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே முதல்வர்முழுமையாக குணமடைந்து வழக்கமான உண்வுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டார் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம்தான், அடுத்தசில நாட்களில் முதல்வருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது, இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்தது.

இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்தான் மருத்துவமனை அளிக்கும் தகவல்கள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது.

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து 5 நாட்களாக எந்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தடுக்க முடியாது. இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் 90% மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையெல்லாம் கடந்து, முதலமைச்சரின் உடல்நலம் குறித்து பேசிக்கொள்பவர்கள் அனைவரும் அவருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர் மீது கொண்ட அக்கறை காரணமாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். உள்நோக்கத்துடன் முதல்வரின் உடல்நிலை குறித்தும், மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது.

ஆனால், முதல்வரின் உடல்நிலை குறித்து வங்கியில் பேசிக் கொண்டிருந்தார்கள், தெருமுனையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அதிமுகவினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் கைது செய்வது அரசியல் பழிவாங்கலுக்கும், அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கும், ஜனநாயகப் படுகொலைக்கும் வழி வகுத்துவிடும்.

எனவே, முதல்வரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மைகளை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறுராமதாஸ்தனதுஅறிக்கையில்கூறியுள்ளார்.

மேலும் படிக்க