November 15, 2017
தண்டோரா குழு
கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முன்னாள் இராணுவ வீரர்கள் நலசங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
கோவைக்கு இருநாட்கள் பயணமாக வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முன்னாள் இராணுவ வீரர் நலசங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் இராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் ,
முன்னாள் இராணுவத்தினருக்கும்,அவர்களது வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்பில் கூடுதல் ஓதுக்கீடு வழங்க வேண்டும். இராணுவ வீரர்களுக்கும்,அவர்களது துணைவியருக்கும் இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும். கோவை மலுமிச்சம்பட்டியில் இராணுவத்தினருக்கும்,விதவைகளுக்கும் ஓதுக்கீடு செய்யப்பட்ட தொகுப்பு வீடுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்து இருப்பதாக தெரிவித்தனர்.