• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆப்பிள் வடிவமைப்பாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வம்சாவளி சிறுமி.

June 22, 2016 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட 9 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்விதா விஜய், மிக இளம் வயதில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர் என்ற பெருமையை பெற்றார்.

ஆப்பிள் நிறுவனம் கணினி உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தது. அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயக்கி மிகவும் சிக்கலானதாக இருந்ததால் பிற்காலங்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரபலமானது. ஆனாலும் தற்போதும் அப்பிளின் கணினி மற்றும் செல்போனுக்கு உள்ள மவுசு குறைந்தபாடில்லை.

இந்நிலையில் அந்த இயக்கிக்குச் செயலிகள் (அப்ளிகேசென்ஸ்) அமைப்பது மிகவும் சிரமம். இந்தியாவில் இருந்து விண்டோஸ் இயக்கிக்குச் செயலி அமைப்பவர்கள் அதிகமாக வெளிநாட்டிற்குச் செல்வது உண்டு. ஆனால் ஆப்பிள் இயக்கிக்குச் செயலி எழுதுபவர்கள் குறைவு. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாடு நடந்தது.

இதில், உலகம் முழுவதுமிருந்து ஆப்பிள் மென்பொருள்களை வடிவமைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுக்கு ஆப்பிள் இயங்குதளத்தில் குழந்தைகளுக்கான செயலிகள் மற்றும் விளையாட்டுகளை வடிவமைக்கும் 9 வயது இந்திய வம்சாவளி மாணவி அன்விதா விஜய் கலந்துகொண்டார். இதன்மூலம், ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட மிக இளம் வயதுடையவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் தனது 7 வது வயதில் தானாகவே யூ டியுப் மற்றும் ஆப்பிள் உதவிகளைப் பெற்று செயலிகளை வடிவமைக்கக் கற்றுக்கொண்டுள்ளார். பின்னர் 8வது வயதில் குழந்தைகளுக்கான முதல் செயலியான கோல்ஸ்ஹய் என்ற செயலியை ஆண்டு விடுமுறையில் கட்டமைத்தார். இதற்காக ஆஸ்திரேலியாவில் சிறந்த செயலிக்கு வழங்கப்படும் விருதான ஓஸ்ஆப் எனப்படும் விருது 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதில் அவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வென்றார். இதையடுத்தே மிகச் சிறிய வயதில் உலகின் மிக அறிய மாநாடான அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் நடத்தும் WWDC எனப்படும் உலக அளவிலான செயலி கட்டமைப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அன்விதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து குடும்பத்துடன் அங்குச் சென்ற அவர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பாகப் பங்களித்தார். இது குறித்து அவர் கூறும்போது, தான் உலகின் மிகச் சிறந்த தொழிலதிபராக வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்பிள் செயலி அமைப்பது மிகவும் கடினம் ஆனாலும் நான் பழகிக்கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க