• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

November 28, 2018 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் தொடர்ந்து முறைகேடு வருவதால் மறுமதிப்பீட்டின் போது மாணவர்களின் முன்னிலையில் செய்ய முடிவு.

கிண்டி பொறியியல் கல்லூரி,அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,எம்.ஐ.டி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் போது அந்தந்த மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் திட்டம் புதிய முறை நடப்புப் பருவம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பொது அனுபவம் உள்ள பேராசிரியர்,அந்த பாடம் கற்பித்த ஆசிரியர் மூவர் இருப்பார்.மாணவன் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் மாணவனிடம் ஏன் மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது எதற்கு இவளோ மதிப்பெண் வழங்கப்பட்டது உள்ளிட்ட வினாக்களுக்குக் குழுவில் உள்ளவர்கள் பதிலளிப்பர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 471 இணைப்புக் கல்லூரிகளுக்கும் இந்த புதிய முறை பொருந்தாது.

முன்பு முப்பது வினாத்தாள் 3மணி நேரத்தில மறுமதிப்பீடு செய்யப்பட்டன.ஆனால் தற்போது விடைத்தாள்களைப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் திருத்துவதற்காகக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.இதனால் 4மணி நேரத்தில் 25 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்படும்.

இந்த புதிய முறை மறுமதிப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் மறுமதிப்பீட்டில் விடைத்தாள் திருத்தும் காலநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க