• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை கோபுரம் வழக்கு முடிவுக்கு வந்தது

November 24, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் தீவிரவாதிகளால் தகரக்கப்பட்ட இரட்டை கோபுரத்தின் இழப்பீடு வழக்கு இன்று
(நவ 24) முடிவுக்கு வந்தது.

கடந்த, 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீது, அல்-கெய்தா தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், அந்த இரண்டு கோபுரங்களும் இடிந்து தரைமட்டம் ஆனது. அந்த தாக்குதலில் சுமார் 2,750 மேலான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்துக்கு சொந்தமானது. சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தக் கட்டடத்தை சில்லவர்ஸ்டீன் என்பவர் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கட்டடத்துக்கு அவர் இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில், தாக்குதலுக்கு பின்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சுமார் 4.55 பில்லியன் டாலர் காப்பீடு தொகை கிடைத்து.

ஆனால், அந்த தாக்குதலுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ்(AA) மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தினர் என்று அந்த இரண்டு விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. மேலும் தனக்கு நஷ்டஈடாக 12.3 பில்லியன் டாலர் தரவேண்டும் என்று கோரினர்.

தற்போது, இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இறுதியாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ்(AA) மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் லாரி சில்வர்ஸ்டைன் 95.5 மில்லியன் டாலர் தருவதாக் தெரிவித்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க