August 10, 2016
தண்டோரா குழு
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி மோட்டார் வாகன சோதனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் வாகன ஆய்வாளர் என்று கூறி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூலித்துக் கொண்டு இருந்த நபரைக் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூர் கந்திலி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பது தெரியவந்தது. ஆனால் அவருடன் வந்த ஓட்டுனர் தப்பியோடிவிட்டார் என ஆம்பூர் கிராமிய போலிசார் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் அவர்கள் கடந்த 1 மாதமாக RTO என்று கூறி வசூலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.