• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த தாயின் சடலத்தை 12 கிமீ பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்

September 1, 2016 தண்டோரா குழு

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தாயாரின் உடலை சுமார் 12 கிலோமீட்டர் பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேசம் உலாட் கிராமத்தைச் சேர்ந்த பர்வதா பாய்(70) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மகன்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்திக்குப் பலமுறை அழைப்பு விடுத்தனர்.ஆனால் அவர்கள் வரவில்லை.

இதனால் பர்வதா பாயின் 2 மகன்கள் மோட்டார் சைக்கிளில் தாயை நடுவில் உட்காரவைத்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.ஆனால்,செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக மீண்டும் அவருடைய உடலை மோட்டார் சைக்கிளிலேயே வீட்டிற்குக் கொண்டு வந்து உள்ளனர்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அம்புலன்ஸ் இல்லாமல் மனைவியை 12 கிலோ மீட்டர் சுமந்த கணவன்,மனைவி உயிரிழந்ததால் நடுக்காட்டில் இறக்கி விடப்பட்ட குடும்பம் மற்றும் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் மகனைத் தோலில் தூக்கிச்சென்ற தந்தை என பல்வேறு அவலங்கள் அரங்கேறியுள்ள நிலையில் இந்த அவலம் அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள அவசர ஊர்தியின் தேவையை வேண்டிக் கேட்கும் மக்களுக்கு அவை தரமறுப்பது ஏன்? அப்படி அதைத் தராமல் இருப்பதால் எத்தனை உயிர்களின் மரணத்திற்கு ஆளாகிறோம்.இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க மாநிலம் மற்றும் மத்திய அரசு உடனே செயலில் இறங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என தற்போது சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க