• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய சமூக நீதிக்கட்சியினர்

December 6, 2018 தண்டோரா குழு

டாக்டர் அம்பேத்கரின் 61-ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 61 நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு , அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச்சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்புத்திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும், உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவையில் பல்வேறு அமைப்புகள் இருபது ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையரிடம் மனு கொடுத்தும் இதுவரை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக சமூக நீதி கட்சி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க