November 16, 2017
தண்டோரா குழு
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் போர்பஸ் பத்திரிக்கை ஆசியாவின் பணக்காரர்கள் குடும்பத்தினர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, முகேஷ் அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பு 19 பில்லியன் டாலரிலிருந்து 44.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதனால் சாம்சங் நிறுவனத்தை நடத்தி வரும் லீஸ் குடும்பத்தினரை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, அம்பானி குடும்பம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தை நிர்வாகிக்கும் லீஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 11.2 பில்லியனிலிருந்து 40.8 பில்லியன் டாலராக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சாம்சங் எலெக்ட்ரானிக்சின் பங்கு 75 சதவீதமாக உயர்ந்தது தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
ஆசியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹாங்காங்கை சேர்ந்த ஹவோக் குடும்பம் 0.4 பில்லியன் டாலர்நிகர மதிப்பு பெற்று, இந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.
தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 36.6 பில்லியன் நிகர மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
ஆசியாவில் முதல் 10 பணக்கார குடும்பங்களில் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய குடும்பம் அம்பானி குடும்பத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.