• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்வது நல்லது: திருநாவுக்கரசர்

October 24, 2016 தண்டோரா குழு

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்வது நல்லது என்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது குறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (அக். 25) கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நானும், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் விவசாய அணி தலைவர் பவன்குமார் ஆகியோரும் பங்கேற்கிறோம்.

காவிரி பிரச்சினை தமிழக நலன் சார்ந்த பிரச்சினை, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. இது தேர்தலுக்காகவோ, கூட்டணிக்காகவோ கூட்டப்படும் கூட்டம் அல்ல. ஆளும் கட்சியே செய்திருக்க வேண்டியுள்ளதை எதிர்க்கட்சி செய்துள்ளது. எல்லோரும் இதில் கலந்து கொள்வது நல்லது.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை அரசியல் கட்சிகள் அரசியல் வாழ்க்கைக்கான பிரச்சினையாக எடுக்கிறதா என்று கேட்கிறீர்கள். இந்த பிரச்சினை இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்டது. இதைச் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பார்க்க வேண்டும்.
நிர்வாக ரீதியான பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க வேண்டும். சட்ட ரீதியான பிரச்சினையை நீதிமன்றம் தீர்த்து வைக்க வேண்டும். கட்சி-மாநிலம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

தமிழர்களின் உரிமையை காக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டத்தை வைகோ விமர்சித்துள்ளார். ஆனால், விமர்சனம் செய்வதற்கும் ஓர் எல்லை உண்டு. கூட்டத்தில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் உரிமை. விமர்சனம் செய்வதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிப்பது ஏன்? அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தி.மு.க.வில் இணைத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் போகிறவர்கள் போவார்கள் வருபவர்கள் வருவார்கள். இது அவரவர் விருப்பம். நாளை நடைபெறும் கூட்டத்தில் ஜி.கே. வாசன் கலந்து கொள்வது மகிழ்ச்சி. காவிரி வி‌ஷயத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு கடமை தவறி விட்டது. தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது மலிவான அரசியல் நடத்துகிறது என திருநாவுக்கரசர் கூறினார்.

மேலும் படிக்க