• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டு பெண்

November 14, 2018 தண்டோரா குழு

ஏர் இந்திய விமானத்தில் மது கொடுக்காததால் ஊழியர் மீது எச்சில் துப்பி கெட்ட வார்த்தைகளால் திட்டிய வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் இருந்து லண்டன் நோக்கி கடந்த 10ம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது.அதில் பயணம் செய்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாளர்களிடம் அதிக அளவு மதுவை வாங்கிக் குடித்துள்ளார்.எனினும்,அதிகளவு மது கேட்ட போது விமானப் பணிக்குழு மதுபானம் வழங்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து,அப்பெண் அனுமதியின்றி பாட்டிலை எடுத்து மது அருந்தியுள்ளார்.போதை தலைக்கேறிய நிலையில்,அப்பெண் ஏர் இந்தியா விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் ஆவேசமாக திட்டியுள்ளார்.

மேலும்,தாம் ஒரு சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் என்றும்,ரோஹிங்யாக்களுக்காக தாம் பணமே பெறாமல் இலவசமாக வாதிடும் போதும்,தமக்காக ஒரு கோப்பை மது கூட அதிகமாகத் தர மறுக்கிறாயா? என ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது, அப்பெண் திடீரென அந்த ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பினார்.இதுமட்டுமின்றி விமானம் பறந்து கொண்டிருந்தபோதே அவர் சத்தம் போட்டபடி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில்,அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க