November 22, 2017
தண்டோரா குழு
ஆக்ரா பல்கலைக்கழக மதிப்பெண் சான்றிதழில் சல்மான்கானின் புகைப்படம் இடம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகம் தற்போது டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அமராதா சிங் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவனின் மதிப்பெண் சான்றிதழில் நடிகர் சல்மான்கானின் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லூரியில் படிக்கும் பி.ஏ. முதலாமாண்டு மாணவரின் 2016 – 2017ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழில்,அந்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை எண் மற்றும் அந்த மாணவனின் பெயர் சரியாக எழுதப்படிருந்தது. ஆனால், மாணவனின் புகைப்படத்திற்கு பதிலாக, பாலிவுட் நடிகர் சல்மான்கானின் புகைப்படம் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.